ஒன்றாக கேள்வி கேட்ட ஓ.பி.எஸ் மகன், கனிமொழி எம்.பி... மத்திய அரசு சொன்ன பதில்

x
  • ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
  • அதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
  • அதில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5 புள்ளி 25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
  • டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலை மதிக்க முடியாத கல்வெட்டுகளை ஒரே தளத்தில் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்