சஸ்பென்ஸை பற்ற வைத்த அண்ணாமலை.. "ஈபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்" - பகீர் கிளப்பிய ஓபிஎஸ்

இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், அதிமுகவில் நடப்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...
x

ஈரோடு தேர்தல் களத்தைவிடவும், அதிமுக உட்கட்சி மோதல் களம் சூடுபறக்கிறது. அதிமுக தலைமை பதவி யாருக்கு? என வெடித்த மோதல் உச்சநீதிமன்ற பஞ்சாயத்தில் இருக்க, அதிமுகவிலும், கொங்கு மண்டலத்திலும் தனது செல்வாக்கை காட்டும் களமாக ஈரோடு கிழக்கில் கோதாவில் இறங்கிவிட்டார் ஈபிஎஸ்...

மறுபுறம் ஓபிஎஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற போது? போட்டியென அறிவித்தவர், பாஜக போட்டியிட்டால் ஆதரவு என்ற செக்கையும் வைத்தார். இருதரப்பும் பாஜகவிடம் ஆதரவு கோரி செல்ல பாஜக அமைதி காத்தது. இன்னொரு பபுறம் ஈபிஎஸ் புயல் ஒட்டுமொத்தமாக ஈரோட்டில் மையம் கொள்ள தொடங்கியது. ஓபிஎஸ் ஏதோ பேசுகிறார் தங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் என ஈபிஎஸ் தரப்பு பிரசாரத்திற்கு பிசியாகிவிட்டது.

இதற்கிடையே பாஜக முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அதிமுகதான் பெரிய கட்சி, கூட்டணியின் வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. அவருடைய பேச்சு பாஜக போட்டியில்லை, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என்ற தொனியில் இருந்தாலும் ஓபிஎஸ் தரப்புக்கா? ஈபிஎஸ் தரப்புக்கா என்ற கேள்வியும் தொடர்கிறது.

சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் ஓபிஎஸ். இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி, விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. ஈரோடு தேர்தல் களம் ஓபிஎஸ் வெர்சஸ் ஈபிஎஸ் ஆகவும் மாறுவது உறுதியாகும் நிலையில், இதில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும்? யாருக்கு செல்வாக்கு இருக்கும்? என்ற பரபரப்பு அதிமுகவில் தொற்றிக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்