காசியிலிருந்து கங்கை நீர் கொண்டுவந்த ஓபிஎஸ்... ராமேஸ்வரத்தில் சிறப்பு அபிஷேகம்.

x

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18ஆம் தேதி தனது மனைவியின் நினைவு நாளை முன்னிட்டு, ராமேஸ்வரம் வருகை தந்து திதி கொடுத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிறப்பு அபிஷேகங்கள் செய்தார். அங்கிருந்து காசிக்கு சென்ற அவர், கங்கை நீரை எடுத்து கொண்டு, மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். குடும்பத்துடன், ராமநாத சுவாமி கோயிலில் கங்கை நீரை வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்ட நிலையில், ஓபிஎஸ் இதன் மூலம் காசி யாத்திரையை நிறைவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்