பேரவையில் சாவர்க்கர் புகைப்படம் வைக்க எதிர்ப்பு - வாசலில் அமர்ந்து காங்கிரசார் போராட்டம்

x

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் உருவப்படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பேரவை வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில், குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதற்கிடையே, பேரவையில் சாவர்க்கரின் உருவப் படத் தை திறக்கும் பாஜக அரசின் முடிவை எதிர்த்து, சுவர்ண சவுதா வளாகத்தில், சித்தராமையா தலைமையிலான காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் அல்ல என்றும் அவர் படத்தை வைத்து பேரவையின் மாண்பை கெடுக்க வேண்டாம் எனவும் காங்கிரசார் தெரிவித்து வருகின்றனர்




Next Story

மேலும் செய்திகள்