ஓபிஎஸ் முயற்சிக்கு எதிர்ப்பு.. திடீரென அணி தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

x

ச‌சிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்கும் ஓபிஎஸ் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் இபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் ஈபிஎஸ்ஸை சந்தித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், தங்களது ஆதரவை தெரிவித்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஓபிஎஸ் இரண்டு மன நிலையில் இருப்பதாகவும் ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூறுவதையே ஓபிஎஸ் கேட்பதாகவும், பட்டியலினத்தவர்களை ஒரம் கட்டிவிட்டு, தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்