தேனியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட எதிர்ப்பு - பாஜக-திராவிடர் கழகத்தினர் இடையே மோதல்

x

தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது... இன்று பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் காந்தி சிலை அருகே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கம்பம் பாஜகவைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் முறையான அனுமதி பெறப்பட்டதால் பிறந்த நாள் விழா இங்கு தான் கொண்டாடப்படும் என்று திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களைத் தனித்தனியாக பிரிந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், பாஜகவைச் சேர்ந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் படத்தை காந்தி சிலைக்கு அருகில் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்