மேயருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் - கேரளாவில் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தற்காலிக பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரிடம் பட்டியல் தருமாறு மேயர் ஆர்யா ராஜேந்திரன் கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளுடன் மாமன்ற கூட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதனால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்