ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ட்ரன்.. "24 மணிநேரத்தில் விவரங்களை தெரிவித்தால்.." - டிஜிபி வெளியிட்ட அறிவிப்பு

x

கடந்த 10 ஆண்டுகளில் காணமால் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, சிறப்பு இயக்கத்தை நடத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளை கண்டறிய, காவல்துறை சார்பில் ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ட்ரன் (OPERATION MISSING CHILDREN) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த திட்டம் தொடர்பாக நகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிகளுக்கு, டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் மாயமான குழந்தைகளை கண்டறிய சிறப்பு இயக்கத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க, சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் அறிவுறுத்தியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு, மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் 24 மணிநேரத்தில் தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை நிறைவேற்றும் காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிகளுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும் என சைலேந்திரபாபு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்