தோனிக்கு ஆபரேஷன்..அடுத்த IPL-ல் விளையாடுவது..?CSK ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

x

சென்னை அணியின் கேப்டன் தோனி முழங்கால் காயம் தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறவுள்ளதாக, அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முழங்கால் காயத்துடனேயே விளையாடினார். இந்தநிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், முழங்கால் காயம் தொடர்பாக தோனி மருத்துவர்களின் ஆலோசனையை பெறவுள்ளதாகவும், அறுவை சிகிச்சை தேவையென்று மருத்துவர்கள் கூறினால், அதனை செய்துகொள்வது குறித்து தோனியே முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார். தோனி அடுத்தாண்டு விளையாடுவது குறித்து முற்றிலும் அவரே முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்