வயல்வெளியில் இருந்த புலிக்குட்டிகள் தாயிடம் சேர்க்கும் ஆபரேஷன் தோல்வி.விடாமல் போராடும் வனத்துறையினர்

x

ஆந்திர மாநிலம் நந்தியாலா அருகே, வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட நான்கு புலிக்குட்டிகளை, தாய் புலியிடம் சேர்ப்பதற்காக வனத்துறையினர் நடத்திய ஆபரேஷன் தோல்வியடைந்தது.

ஆத்மகூர் வயல்வெளியில், நான்கு புலிக்குட்டிகள் இருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், புலிக்குட்டிகளை மீட்டு ஆத்மகூர் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதனிடையே, புலிக்குட்டிகளை தாயிடம் சேர்ப்பதற்காக, அம்மா புலி திட்டம் என்ற பெயரில் வனத்துறையினர் செயல் திட்டத்தைத் தொடங்கினர். அதன்படி, புலி குட்டிகள் உறுமுவது போல் பதிவு செய்யப்பட்ட சப்தத்தை வயல்வெளியில் ஒலிபரப்பினர். ஆனால் தாய் புலி வராததால், ஏமாற்றமடைந்த வனத்துறையினர் புலிக்குட்டிகளை மீண்டும் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தாய் புலியின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்