ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரம் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஓ.பி. ரவீந்திரநாத் மீது வழக்கு தொடுத்த மிலானியை கண்டித்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கூடிய அவர்கள், மிலானிக்கு எதிராக முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தென்கரை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தில், 15 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com