முதியவர்கள் மட்டுமே டார்கெட்...பல லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகி..தட்டி தூக்கிய போலீஸ்

பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சிவா அரவிந்தன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பவானி என்பவருக்கு சொந்தமான வீட்டை 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து அதனை பதினாறு லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிவா அரவிந்தன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராஜேந்திரன், லீனா பெர்னாண்டஸ் ஆகியோரின் வீடுகளையும் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்து அதனை குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாஜகவில் மாநில அளவில் பதவி வாங்கி தருவதாக நாகராஜ் என்பவரிடம் 16 லட்சம் ரூபாயும் , ராதாகிருஷ்ணன் என்பவரிடம் 55 லட்சம் ரூபாயும், மாதவன் என்பவனிடம் ஒன்றரை லட்சம் ரூபாயும் பணம் வாங்கி கொண்டு அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com