முதியோர்கள் மட்டுமே டார்கேட்... மாற்றுத்திறனாளி செய்த சம்பவம் - கடலூரில் அதிர்ச்சி

x

கடலூரில், முதியோர்களை குறிவைத்து, அரசு அதிகாரி எனக் கூறி நகைகளை ஆட்டைய போடும் மாற்றுதிறனாளி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி சாரதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தான் அரசு அதிகாரி என்றும், முதியோர் உதவித்தொகை வழங்க புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும் கூறி, அவரது வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். நகை அணிந்து எடுத்தால், பணக்காரங்கனு நினைச்சிருவாங்க என சொல்லி, மூதாட்டியிடம் நகைகளை கழட்டி வைக்குமாறு அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்பி, 10 ஆயிரம் மதிப்பிலான 2 கிராம் கம்பலை மூதாட்டி கழட்டி வைக்கவே, அதனை அந்த நபர் பேப்பரில் மடித்து வைத்துள்ளார். புகைப்படம் எடுத்த உடனே, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன் பிறகு பேப்பரை பிரித்து பார்த்தபோது, அதில் கற்களை மடித்து வைத்திருந்தது, மூதாட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரத்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்