சென்னை முழுக்க இனி ஒரே டிக்கெட்! - ரெயில், பஸ்,மெட்ரோ எதுல போனாலும் ஓகே தான்! | thanthi tv

x

சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னையில், பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னை முழுவதும் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்க ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அமல்படுத்த செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதில், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணிப்பது குறித்து தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகையை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்