"இப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது" -ஊக்கத்தொகை பெற்ற வீரர் உருக்கமான பேச்சு

x

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கக்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 190 வீரர், வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 2022 ல் நடந்த சர்வதேச தடகள போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள், 2019 ல் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகள் மற்றும் குஜராத்தில் நடந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், விளையாட்டுத்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கவுதம் சிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்