வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்த இளைஞர்

x

தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலன் என்ற இளைஞர், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாலன் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது தெரியவந்தது. மேலும் தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், தற்கொலை செய்யப் போவதாகவும் தகவல் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து பாலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்