ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..." ஏன் ஆளுநர் பதுங்க வேண்டும்..." - முரசொலி நாளிதழில் கடும் விமர்சனம்

x
  • பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பிய நிலையில், முரசொலி நாளிதழில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள தலையங்கக் கட்டுரையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி 4 மாதங்கள் கழித்து, "இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்துக்கு அதிகாரமில்லை" என்று ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், கடமையைச் செய்யக் கூடாது என்று ஒரு மாநிலத்தின் ஆளுநரே சொல்வதை விட சட்டவிரோதம் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
  • அத்துடன், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என எதற்காக ஆளுநர் பதுங்க வேண்டும் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்