ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம்... "ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - எர்ணாவூர் நாராயணன்

x

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார். அந்த கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. அதில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை இந்த முறையில் ஆளுநர் திருப்பி அனுப்பினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்