ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா... குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க வாய்ப்பு..? | Online Rummy Act

x
  • ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அனைத்து கட்சியின் ஒப்புதலோடு நிறைவேற்றி, தமிழக அரசு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
  • இந்த நிலையில், இதுதொடர்பான சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த மசோதாவை 4 மாதங்கள் கழித்து ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.
  • அதைத் தொடர்ந்து கூடிய அமைச்சரவையில், சட்டசபையில் இதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
  • அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, வியாழக்கிழமையன்று மீண்டும் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவை சட்டத்துறைக்கு சட்டசபை செயலகம் நேற்று அனுப்பி வைத்தது.
  • அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றுவிட்டு, நேற்று மாலை அதை ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
  • ஒரு சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
  • ஆனாலும் அதற்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை.
  • இந்த பிரச்சினை மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதாக ஆளுநர் ஏற்கனவே கூறியிருப்பதால், இந்த மசோதாவை அவர் குடியரசுதலைவருக்கு அனுப்பிவைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்