"ஆன்லைன் ரம்மி... அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு - தடை விதிக்க முடியாது"

x

ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி, தடை விதிக்க முடியாது என ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், ரம்மியை பொறுத்தவரை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி, தமிழக அரசு தடை செய்துள்ளதாக வாதிட்டார். தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, திறமைக்கான விளையாட்டுக்களில் அதிர்ஷ்டத்துக்கான வாய்ப்பு இருந்தால் அதனை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கூற முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பின் வாதங்களுக்கு பிறகு, வழக்கின் விசாரணை ஜூலை 19 - ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்