ஓரின சேர்க்கைக்காக ஆசை ஆசையாக சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி - சென்னையில் பயங்கர சம்பவம்

x

சென்னை அம்பத்தூர் அருகே, ஆன்-லைன் டேட்டிங் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, வழக்கறிஞரிடம் நகைகளை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ரூபன் என்ற வழக்கறிஞர், ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அந்த செயலி மூலம் திருமுல்லைவாயில் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த விக்கி என்ற இளைஞருடன் ரூபனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக ரூபனை அழைத்துள்ளார் விக்கி. அங்கு சென்றபோது, விக்கியும் அவரது நண்பர் சக்திகுமாரும் சேர்ந்து ரூபனை வழக்கறிஞரைத் தாக்கி விட்டு, விலை உயர்ந்த செல்போன் மற்றும் அணிந்திருந்த நகைகளை, அந்த நபர் தமது நண்பருடன் சேர்ந்து பறித்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்