"ஆன்லைன் முன்பதிவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது" - ஆம்னி பேருந்து பயணி கருத்து

x

ஆன்லைன் முன்பதிவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது" - ஆம்னி பேருந்து பயணி கருத்து

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சோதனை நடத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பேருந்து கட்டணம் தொடர்பாக யாரும் புகாரளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணித்து வரும் நிலையில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இதுவரை புகார் வரவில்லை எனவும், இருக்கைகள் நிரம்பாததால், கட்டணத்தை குறைத்துள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதேநேரத்தில் பயணிகள், ஆன்லைன் முன்பதிவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்