ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி மறு பக்கம் கடவுள்.. புதிய மாற்றம்? |

x

ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி மறு பக்கம் கடவுள்.. புதிய மாற்றம்? ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிடவேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில், அவர் பிரதமர் மோடிக்கு இது குறித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படம் இருக்கடும்; மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்கள் அச்சிடப்பட வேண்டும்; இது நாட்டு மக்கள் 130 கோடி பேரின் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார். சரியான கொள்கை, கடினமான உழைப்பு ஆகியவற்றோடு, கடவுளின் ஆசியும் இருந்தால்தான் நாடு முன்னேறும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்