"ஒருவர் நல்லவர்.. ஒருவர் கெட்டவர்" - பரபரப்பை கிளப்பிய தனுஷின் ட்வீட்

x

நானே வருவேன் படத்தின் முதல் பாடல் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். செல்வராகவன் - தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் நானே வருவேன் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் அப்டேட்டை வெளியிட்ட தனுஷ், இந்த மாதத்தில் படம் வெளியாக உள்ளதையும் உறுதி செய்தார். படத்தில் தனுஷ் இரட்டை ரோலில் நடிப்பதாக தயாரிப்பாளர் தாணு கூறியிருந்த நிலையில், தனது டிவிட்டர் பதிவில் "ஒரு ராஜா நல்லவர், மற்றொரு ராஜா கெட்டவர்" என தனுஷ் குறிப்பிட்டுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்