ஒரு திருட்டுக்கு இன்னொரு திருட்டு - ஷார்ப் திருடர்கள் செய்த முரட்டு சம்பவம்

x

நாகர்கோவில் அருகே, மளிகைக்கடை சுவரில் துளையிட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

பார்வதிபுரம் பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் இருந்து டிரில்லிங் மெஷினை திருடிய நபர்கள், அருகே உள்ள மளிகை கடையின் சுவரில் துளையிட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வடசேரி போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்