பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்... காலில் விழுந்து வணங்கிய நபர் - உருக்கமான வீடியோ

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பறையிசை பேரணி நடைபெற்றது. பறையிசை குழுவினரை ஆர்வத்துடன் கண்ட இனியன் என்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு, இசைக்குழுவினர் சிறிய பறையை வழங்கினர். இதையடுத்து சிறுவனும் பறை இசைத்தபடி பேரணியில் நடக்க தொடங்கியதை, அங்கிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அப்போது சிறுவனின் காலில் விழுந்து கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com