மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8 பேருடன் வந்த கார் மோதி துடிதுடித்து இறந்த மூதாட்டி
புதுச்சேரி இளங்கோ நகரைச் சேர்ந்த பிரசனகுமாரி என்ற மூதாட்டி, தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் மகனுடன், இன்று அதிகாலை ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெருங்குளத்தூரில் தனியார் கல்லூரியில் பயிலும் 8 மாணவர்கள் வந்த கார், ஆட்டோ மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த மஹாதீர்ரை என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
