ஃபைனல் ஓவர்.. 19 ரன்கள்.. 4 சிக்ஸர்கள்... டி20 உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் - "கார்லஸ் பிராத்வெய்ட்... ரிமெம்பர் தி நேம்.."

x

கடந்த 2016ம் ஆண்டு இதே நாள் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வென்றதை, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். இறுதிப்போட்டியில் 156 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் துரத்தியது. கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டோக்ஸ் வீசிய நிலையில், தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு கார்லோஸ் ப்ரத்வெய்ட் வெஸ்ட் இண்டீஸை வெற்றி வாகை சூடச் செய்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்