சாவர்க்கர் பிறந்த நாளில்..நாடாளுமன்ற கட்டிடம் திறப்பா?-எதிர்க்கும் எதிர்க்கட்சியினர்...

x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பிற்பகல் 12 மணியளவில் திறக்கப்படுகிறது.

முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் 64ஆயிரத்து 500 சதுர அடி அளவில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்திலும் கட்டுமன பணிகள், தொய்வு இல்லாமல் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடியால் பிற்பகல் 12 மணி அளவில் திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலை வகிக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை, குடியரசுத்தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் பிரதமர் அல்ல என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும், பாஜகவின் அமித் மால்வியா தமது டிவிட்டர் பக்கத்தில், வரும் 28 ஆம் தேதி, சாவர்க்கரின் பிறந்த நாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறந்த வைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்