காமராஜர் பிறந்தநாளில்... தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும்..! வெளியான அறிவிப்பு

x

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 15ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காமராஜரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு நிர்வாகிகளுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்