ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் - 50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி

x

சென்னை புறநகரில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிரடியாக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை வைத்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2 நாட்களாக கத்திப்பாரா, அசோக் நகர் பகுதிகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 140க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமீறி இயக்கப்பட்ட 8 வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்