BF.7 கொரோனா பரவல்.. கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு..!

x

சீனாவை அச்சுறுத்தி வரும் பி.எஃப்.7 வகை கொரோனா மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவும் பி எஃப் 7 கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி எஃப் 7 வகை கொரோனா தொற்று குஜராத்தில் இருவருக்கும், ஒடிசா மற்றும் ஆந்திராவில் தலா ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழு உடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் நாடு முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு பி எஃப் 7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்