பாலியல் இச்சைக்கு பலியான மூதாட்டிகள்... போலீஸில் சிக்கிய சைக்கோ கிள்ளர்...!

x

பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாயி. வயதான காலத்தில் 100 நாள் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று வீட்டிற்குத் துடைப்பம் செய்வதற்காகத் தென்னை ஓலை எடுக்கக் காட்டுப்பகுதிக்கு சென்றவர் மீண்டும் வரவே இல்லை. வெகு நேரமாகியும் பாவாயி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், அவரை தேடிச் சென்ற போது கரும்புகாட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.அவரது சடலத்தை உடற்கூராய்வு செய்து பார்த்த போது தான் அவர் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.அதோடு பாவாயி அணிந்திருந்த 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், தடயங்களை சேகரித்து தீவிர விசாரனையில் இறங்கி இருக்கிறார்கள். பாவாயி கொலையின் கொதிப்பு அடங்குவதற்குள் அதே பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரம் நடந்திருக்கிறது.. அதுதான் பழனியம்மாளின் கொலை... நமக்கள் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். கணவனை இழந்த இவர் விவசாய நிலத்தில் குடிசை அமைத்து அதில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.விவசாயத்தோடு சேர்ந்து ஆடு மாடுகளை மேய்ப்பது, பால் விற்பனை செய்வது பழனியம்மாளின் தொழில். பொழுது விடிந்ததும் பால் கேனோடு வீட்டு கதவைத் தட்டும் பழனியமாள், சம்பவத்தன்று வெகு நேரமாகியும் வரவில்லை.இதனால் பழனியம்மாவிடம் பால் வாங்கும் கஸ்டமர்கள் அவரது வீட்டிற்குத் தேடி வந்திருக்கிறார்கள். காலையில் கரக்கப்பட்ட பால் அப்படியே கேனில் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அக்கம்பக்கத்துப் பகுதிகளில் தேடிப்பார்த்த போது தான், அவர்கள் கண்ட காட்சி குலை நடுங்க வைத்திருக்கிறது.

ஆடைகள் கிழிந்த நிலையில் நிர்வாண கோலத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார் பழனியம்மாள் உடனே காவல் நிலையத்திற்குள் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனியமாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.பழனியமாள் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போது தான் பாவாயி கொலைக்கும் பழனியம்மாள் கொலைக்கும் பல ஒற்றுமை இருப்பதை போலீசார் கவனித்திருக்கிறார்கள். இதனால் இரண்டு கொலையையும் ஒரே ஆள் தான் செய்திருக்க வேண்டும் என முடிவு செய்த போலீசார் பழனியம்மாளின் உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தினர் என அத்தனை பேரையும் விசாரனை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அப்போது தான் பழனியம்மாளிடம் வேலைபார்த்து வந்த செல்வத்தின் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பி இருக்கிறது. இதனையடுத்து விசாரனைக்காக செல்வத்தை போலீசார் தேடிச்சென்ற போது அவர் காக்கிச்சட்டையைப் பார்த்ததும் தலை தெறிக்க தப்பி ஓடி இருக்கிறார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு தூக்கிவந்து நடத்திய விசாரனையில் அத்தனை உண்மைகளும் வெளிவந்திருக்கிறது. பாவாயி, மற்றும் பழனியம்மாள் இருவரையும் கொடூரமாக கொலைசெய்ய காரனம் செல்வத்தின் காம வெறி.பாலியல் எண்ணம் வந்துவிட்டால் செல்வம் சைக்கோவாக மாறிவிடுவாராம். அந்த நேரத்தில் உல்லாசத்தை தேடும் செல்வம் தனது இச்சையை தீர்த்துக் கொள்ள தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்திருக்கிறார். அப்படித்தான் பாவாயி தோட்டத்திற்குச் சென்ற போது , அவரை பின் தொடர்ந்து சென்று காமவேட்டையாடி இருக்கிறார் செல்வம்.

போலீசாரின் விசாரனை தன்னை நெருங்கவில்லை என்பதால் அடுத்த 3 மாதங்களிலேயே மீண்டும் களத்தில் இறங்கிய செல்வத்திற்கு பழனியம்மாளின் ஞாபகம் வந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் செல்வம் பழனியம்மாளிடம் ஆடு, மாடு, மேய்க்கும் வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் பழனியம்மாள் எப்போது வீட்டில் இருப்பார், எப்போது வெளியே செல்வார் என அத்தனையும் செல்வத்திற்கு அத்துப்படி. சம்பவத்தன்று பழனியம்மாள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்