பேத்தியோடு சாலை கடந்த மூதாட்டி... வாகனம் மோதி உடல் நசுங்கி பலி - கர்ணன் பட பாணியில் நொறுக்கப்பட்ட வாகனம்

நாமக்கல் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அடித்து நொறுக்கினர். மாதேஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி, 8-ஆம் வகுப்பு பயின்று வரும் தனது பேத்தியுடன் சாலையைக் கடந்தார். அப்போது, தனியார் நூற்பாலையின் வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேத்தி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சரமாரியாக அடித்து நொறுக்கினர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com