"ஓலா, உபர் என்பதால்..." "லேட் ஆனா கேன்சல் பண்ணிடுறாங்க" தலைகீழாக மாறிவரும் நிலை

x

"ஓலா, உபர் என்பதால்..." "லேட் ஆனா கேன்சல் பண்ணிடுறாங்க" தலைகீழாக மாறிவரும் நிலை

ஓலா, உபர் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் நிலையில் இதுகுறித்து அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...

சென்னை மாநகரில் "அண்ணா ஆட்டோ..." என்ற அழைப்பு நின்றுபோய் ஆன்-லைனில் ஆட்டோவை அழைப்பது என்றோ பிரபலமாகிவிட்டது.

Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்-லைன் ஆப் வாயிலாக ஆட்டோ, டாக்சி சேவையை வழங்குவதுடன் வாடகை பைக் சேவையையும் வழங்கி வருகின்றன...

சாலையில் காத்திருக்க வேண்டாம், வீட்டு வாசலுக்கே ஆட்டோ வரும், குறைந்த கட்டணம் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளால் வாடிக்கையாளர்களை ஈர்த்தன இந்த நிறுவனங்கள்...

இதனால் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆப்களில் புக் செய்ய தொடங்கினர் பயணிகள். ஆனால் சமீபகாலமாக இந்த நிலை தலைகீழாக மாறிவருகிறது.

ஆம் இப்போது இதுபோன்ற பயணம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்போது ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் கேட்பதாலும், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதாலும் பயணம் மன உளைச்சலை தருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் பயணிகள்.


Next Story

மேலும் செய்திகள்