ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் கவிழ்ந்து விபத்து- 2 மென்பொறியாளர்கள் பலி

x

ஒ கேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ௨ மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மென்பொறி நிறுவனத்தில் பணியாற்றிவந்த பெண் மென்பொறியாளர் உட்பட 7 பேர் கார் ஒன்றில், பெங்களூரில் இருந்து ஒசூர் வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர்.

அஞ்செட்டி அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் சிராஜ், பிரவீனா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அஞ்செட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்