தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு படையெடுத்த அதிகாரிகள்

x

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நிதானமாக வாகனங்களை இயக்கும் படி ஓட்டுனர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தென்காசி

தென்காசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதற்கட்டமாக 156 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் இயக்கப்படும் பள்ளி பேருந்து மற்றும் வேன்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 30 - க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முறையாக பாதுகாப்பு வசதி இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 56 தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 393 வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகன ஓட்டுனர்களிடம் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புக், காப்பீடு சான்றிதழ் ஆகியவை முறையாக உள்ளதா என்று கேட்டறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்