நாடு ழுழுவதும் பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு..! - 45 பேர் கைது

x

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் கேரளம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளுக்குச் சொந்தமான 93 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது. தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளுக்குப் பிறகு கேரளத்தில் 19 பேர், தமிழகத்தில் 11 பேர், கர்நாடகத்தில் 7 பேர், ஆந்திரத்தில் 4 பேர், ராஜஸ்தானில் 2 பேர், உத்தர பிரதேசம், தெலங்கானாவில் தலா ஒருவர் என மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்