கரூர் ஐடி ரெய்டில் தாக்கப்பட்டு கவனம் ஈர்த்த அதிகாரி காயத்ரி..! யார் இந்த காயத்ரி..நினைவிருக்கா..?

x

கரூரில் ஐ.டி ரெய்டின் போது தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, முன்னாள் தடகள வீராங்கனையாவார்.

கரூரில் தாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகளும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அவர்களில் அதிகாரி காயத்ரி தடகளத்தில் பல சாதனைகளைப் புரிந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அரியலூரைப் பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி, ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட போதும், பள்ளி காலத்திலேயே தடகளத்தில் ஜொலித்துள்ளார்... படிப்பிலும் படு கெட்டிக்காரரான இவர், 12ம் வகுப்பில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016ல் அஸ்ஸாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம், 2008-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வாங்கியுள்ளார்.

தடகள விளையாட்டுப் போட்டி சாதனைகள் மூலம் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட காயத்ரி, கரூருக்குச் சோதனை நடத்த வந்த இடத்தில், தாக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் மூலம், மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்