பத்திரகாளியம்மன் கோயிலில் கொடை விழா.. கும்மியடித்து குலவை சத்தத்துடன் வழிபாடு | Nellai | Temple fest

x

நெல்லை பணகுடி பத்திரகாளியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது... 8 காளி அம்மன்கள் அடங்கிய பிரசித்தி பெற்ற பணகுடி பத்திரகாளியம்மன் கோயிலில் கொடை விழாவின் 3வது நாளை முன்னிட்டு வாதைகாளி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, மஞ்சள் பெட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மியடித்து குலவை சத்தத்துடன் வழிபாடு நடத்தினர்... அம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்