ரயில் விபத்து..சிக்கலில் முக்கிய புள்ளி..? "ரயில்வே அதிகாரிகள் போன் கால் ஒட்டுக்கேட்பு" - கிளம்பிய புது பீதி

x

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ விசாரணை பயனளிக்காது என்றும், மக்கள் உண்மையை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க.வை சேர்ந்த மேற்குவங்க எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி, ஒடிசா ரயில் விபத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சதி என குற்றம் சாட்டியுள்ளார். வேறுறொரு மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இவர்கள் ஏன் பீதி அடைந்துள்ளார்கள்? என்றும், சி.பி.ஐ. விசாரணை குறித்து அச்சப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை உதவியுடன், 2 ரயில்வே அதிகாரிகளின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டுள்ளதாகவும், இல்லாவிட்டால் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரியும் என்றும், சுவேந்து அதிகாரி வினவியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்