288 பேரை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்து.. லோகோ பைலட்டுகளுக்கு பறந்த வார்னிங் - இந்திய ரயில்வே அதிரடி

x

லோகோ பைலட்டுகள் இனி மொபைல் போன் ஆனில் வைத்திருக்கவும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தவும் தடை விதித்து இந்திய ரயில்வே ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது..

288 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அநத வகையில், ரயிலை இயக்குவது, சிக்னல் தருவது, வேகம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறாது. மேலும் பைலட்டுகளின் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணிக்கபப்ட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயிலை இயக்கிய லோகோ பைலட் ஒருவர் தனது ஸ்மார்ட் கடிகாரத்தை அடிக்கடி பார்த்தபடியே ரயிலை இயக்கியது கண்டறியப்பட்டுள்ளது.

ரயில் லோகோ பைலட்டுகளின் இம்மாதிரியான செயல்களால் பல்வேறு சிக்கல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாலும், அதனை தடுக்கும் பொருட்டும் முதற்கட்டமாக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி லோகோ பைலட்டுகள் இனி பயண நேரத்தின் போது மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் .

எந்த நேரத்திலும் மீண்டும் போனை ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது . ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட போனை அருகில் வைத்திருக்கக் கூடாது.

ஸ்மார்ட் வாட்ச் மொபைல் போனுடன் இணைக்கப்படும் சாதனம் என்பதால் அதற்கும் தடை விதிப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய ரயில்வேயில் உள்ள பணியாளர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்து வதற்க்கு தடை நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி, இனி லோகோ பைலட்டுகளின் செயல்பாடுகள், பைலட்டுகளின் கவனம், ரயில் இயக்கும் திறன் போன்றவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே ஆணையம் கூறியுள்ளது.

தொடர்ந்து லோகோ பைலட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்