உயிர் பறித்தும் உடல்களை விட்டு நீங்காத கொடூர கோரமண்டல் "சாபம்"..ஒரு உடலுக்கு உரிமை கோரும் பல தாய்கள்

x

ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்த மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். உருக்குலைந்து கிடந்த பெட்டிகளின், உள்ளேயும், வெளியேயும் உடல்கள் சிதறிக்கிடந்தன. படுகாயமடைந்தவர்களின் அபயக்குரல் கேட்போரை பதைபதைக்க செய்தன. இரண்டு நாட்களாக இறந்த உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்தாலும், பல உடல்கள் அடையாளம் தெரியாதபடி சிதைந்திருந்தன. உடல்களை ஒரே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அவலம், புவனேஸ்வரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் உடல்களை குவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

உயிரிழந்த தன் அன்பிற்கினியவர்களின் முகத்தை இறுதியாக ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா, என்ற ஏக்கத்தில் உடலை தேடி வந்த உறவினர்கள் எந்த மருத்துவமனையில் இறந்தவர் களின் சடலம் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக, ஒடிசா அரசு உதவி மையங்களை ஏற்பாடு செய்துள்ள நிலையிலும் உறவுகளின் தேடல் தொடர்கதை யாகவே இருந்து வருகிறது. தாங்க முடியாத சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் உறவினர்கள், மறுபக்கம் இறந்தவர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக, ஒரு உடலுக்கு, பலர் சொந்தம் கொண்டாடும் அவலம் அரங்கேறிவருகிறது. இந்த பிரச்னையை அம்மாநில அரசு எப்படி அணுக போகின்றது என எதிர்பார்த்த வேளையில், மரபணு பரிசோதனை செய்து ஒப்படைப்போம் என தெரிவித்திருக் கின்றனர். ஏற்கனவே துக்கத்தை சுமந்த நெஞ்சங்கள், இந்த துயரத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் வேதனையின் உச்சம்.


Next Story

மேலும் செய்திகள்