ஒடிசா ரயில் விபத்து.. மின்சாரம் தாக்கி 40 பயணிகள் பலி? - அதிர்ச்சி தகவல்

x

ஒடிசா ரயில் விபத்தில், மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோா் அருகே, கடந்த 2ஆம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர். இதனிடையே, 40 பயணிகளின் உடல்களில் வெளிப்புற காயம் இல்லை எனவும், ரயில் பெட்டிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்