அடேங்கப்பா.. இவ்வளவு பெருசா? நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் - திறந்து வைத்த ஒடிசா முதல்வர்

x

அடேங்கப்பா.. இவ்வளவு பெருசா? நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் - திறந்து வைத்த ஒடிசா முதல்வர்


இந்தியாவின் மிகப் பெரிய ஹாக்கி மைதானத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். வருகிற 13ம் தேதி ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு ரூர்கேலா 21 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டது. பழங்குடியினப் போராளி பிர்சா முண்டா பெயரில் இந்த மைதானம் அமைக்கப்பட்ட நிலையில், அதனை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் வருகிற 13ம் தேதி ஸ்பெயின் உடன் இந்தியா மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்