ஒருநாள் உலகக்கோப்பை... சூப்பர் 6 சுற்றில் இலங்கை - வெளியேறியது அயர்லாந்து

x

உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சூப்பர்-சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறி உள்ளது. புலவாயோவில் நடைபெற்ற லீக் போட்டியில் அயர்லாந்தும் இலங்கையும் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை, கருணரத்னேவின் சதத்தால் 325 ரன்கள் குவித்தது. 326 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து, 31வது ஓவரில் 192 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த வெற்றி மூலம் 6 புள்ளிகளுடன் சூப்பர்-சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியது. நடப்பு தொடரில் ஒரு வெற்றிகூட பெறாத அயர்லாந்து, உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


Next Story

மேலும் செய்திகள்