ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர் - ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல் | Shreyas Iyer

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 17ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார். தண்டுவடப் பகுதி காயத்தால் 4வது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயர் பாதியிலேயே விலகினார். காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமடையாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com