கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்… மணப்பாறை மியா கலிஃபா மீது குவியும் புகார்...

x

மணப்பாறையின் mia khalifa, mia malkova என இளந்தாரிகள் வட்டமடித்து கொண்டிருந்த இந்த ஆபாச மங்கைகளை தற்போது காவல்துறையினர் வழக்குகள் வட்டமடிக்க தொடங்கி இருக்கிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என்ற பேரில் பி-கிரேட் கச்சேரிகள் அரங்கேறுவதற்கு யார் காரணம்? மக்களை மகிழ்விக்க நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி காம நிகழ்ச்சியாக மாறியது எப்படி? விசாரணையில் களமிறங்கினோம். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ளது மேத்தக்கான்பட்டி கிராமம்.

கடந்த 25ஆம் தேதி இந்த கிராமத்திலுள்ள அம்மன் கோவிலில் வெகுவிமர்சையாக திருவிழா நடத்தப்பட்டது… அம்மனை குளிர்விக்க பூஜை புணஸ்காரங்கள் செய்ததுபோல் ஊரிலுள்ள ஆண்களை குஷிப்படுத்த மாலை ஆறு மணிக்கு மேல் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.பொதுவாக ஒரு கிராமத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறவேண்டும்… ஆனால், புதுக்கோட்டை திருச்சி மாவட்டங்கள் பொறுத்தவரை காவல் நிலையத்தில் அனுமதி பெற்றாலேபோதும். இதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட சில நடன குழுக்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆபாச நடனங்களை ஆடுகின்றனர்.

இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நடனமாடுவதால் இதுபோன்ற நடன குழுக்களுக்கு சுற்றுவட்டார மாவட்டங்களில் மவுசு அதிகரிக்கிறது. இதுபோன்ற ஆபாச நடனங்களில் பணம் அதிகம் கிடைப்பதால் சுற்றுவட்டரத்திலுள்ள மற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சி குழுக்களும் நீ நான் என்று போட்டி போட்டு ஆபாசமாக ஆடதொடங்கிவிடுகின்றனர். மேத்தக்கான்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சியை அங்கிருந்த இளைஞர்கள் வீடியோவாக பதிவுச் செய்து சமூக வளைதளங்களில் பதிவுச் செய்திருக்கிறார்கள். இதைப்பார்த்து கொதித்துப்போன தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மணப்பாறை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அரசாங்கம் மொத்தமாகவே நடன நிகழ்சிகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவு ஆபாசமாக ஆடாத நடன கலைஞர்களையும் சேர்த்தே பாதித்தது. இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பல கலைஞர்கள் பாதிப்படைய நேரிடம். அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்