திருப்பத்தூரில் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்..நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு..

திருப்பத்தூரில் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்..நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு..
Published on

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி, கோயில் விழாவில் ஆபாச நடனம் அரங்கேறியது. நாயனசெருவு கிராமத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி நடன நாட்டியாலயா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் ஆபாச உடையணிந்து சினிமா பாடலுக்கு நடனமாடினர். போலீசார் கண்டித்தும், அதனை பொருட்படுத்தாமல் ஆபாச நடனம் தொடர்ந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com