கொரோனா பணியில் உயிரிழந்த செவிலியர் "அரசிடம் நிவாரணம் கோர முடியாது“

x

கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் உறவினர்கள், மத்திய, மாநில, என இரு அரசுகளிடமும் நிவாரணம் கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி என்பவர், 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். தனது மனைவியின் இறப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரி, தங்கலட்சுமியின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பிரதம மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் என்ற காப்பீடு திட்டத்தின் கீழ், ஏற்கனவே 50 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அல்லது மாநில அரசு திட்டத்தின் கீழ், பலன் பெறலாம் என குறிப்பிட்ட நீதிமன்றம், இரு அரசுகளிடமும் நிவாரணம் கோர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்